2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நல்லூரில் கோவிலில் புதிய நடைமுறை

Niroshini   / 2022 ஜனவரி 02 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த் 
 

புதிய ஆண்டு பிறப்பின் முதல் நாளான நேற்று (01), வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலில், இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில், அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு, கோவில் முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய நடைமுறை, நேற்று  (01), கோவில் நிர்வாக அதிகாரியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிலுக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர், அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று, அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .