Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவத்துக்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென, யாழ். மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ். மாநகர மேயர் வி. மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களில் நடைமுறைகளில் மாற்றங்கள் பற்றி அடியார்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படுமமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளும் சிறுவர்களும் வயோதிபர்களும் கோவிலுக்கு வருவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், கொவிட் - 19 நோய் அறிகுறிகள் உள்ளவர்கள், வீதித் தடையில் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறினார்.
கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் வேளையில் அடியார்கள் முழுமையாக நடைமுறைகளை பின்பற்றுவதோடு, தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பதும் அவசியமாகுமெனவும், அவர் கூறினார்.
கோவிலுக்கு அனுமதிக்கப்படும் வேளையில், ஆண் அடியார்கள் வேட்டியுடனும் பெண்கள் கலாசார உடைகளுடனும் வருதல் வேண்டுமெனத் தெரிவித்த அவர், சுகாதார நடைமுறைகளுக்கேற்ப அடியார்கள் கோவிலுக்குள் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களின் படி, அவர்கள் கோவில் வளாகத்தினுள் தரித்து நிற்கவோ அமர்ந்திருக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறினார்.
அடியவர்கள், கோவிலுக்கு அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியவர்களும் முத்திரைச் சந்தியிலிருந்து, பருத்தித்துறை வீதியால் மாத்திரமே கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும், அவர் கூறினார்.
கோவிலுக்கு வந்து சேரும் ஏனைய மூன்று வீதிகளும் அடியவர்கள் செல்வதற்கு முழுமையாகத் தடை செய்யப்படுமெனத் தெரிவித்த அவர், வீதித்தடைக்கு உள்ளே நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட மக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் மாநகர சபையின் அனுமதி அட்டையுடன் ஏனைய வீதித்தடைகளினூடாகச் சென்று வர அனுமதிக்கப்படுவர் எனவும் கூறினார்.
'தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், காவடி, தூக்குக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் மேற்கொள்ளுதல், தாகசாந்தி, அன்னதானம் வழங்கல் போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
'கோவில் சூழலிலும் கோவிலை அண்டியுள்ள பகுதிகளிலும் அடியார்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள்,நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன' என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago