Princiya Dixci / 2020 நவம்பர் 19 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், என்.ராஜ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்), இன்று (19) தோற்கடிக்கப்பட்டுள்ளது.
20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு வாக்களித்தனர். ஒருவர் நடுநிலை வகித்தார்.
அதன் அடிப்படையில், நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை மேலதிக 3வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் என 8 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இந்த நிலையில், தற்போது முன்மொழியப்பட்ட நிதியறிக்கையை சீரமைத்து மீளவும் சபையில் முன்மொழியப்படவேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025