Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில், கவிஞர் மாவை வரோதயனின் 10ஆவது ஆண்டு நினைவேந்தலும் தாயகம் சிறப்பிதழ் அறிமுகமும், தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை (05) பிற்பகல்-04 மணிக்கு நடைபெறவுள்ளது.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான க. தணிகாசலம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், தாயகம் சஞ்சிகைக்கான அறிமுக உரையை எழுத்தாளர் இயல்வாணன் ஆற்றவுள்ளதுடன், நினைவுப் பேருரையை "கீழடி அகழ்வாய்வும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையும்" எனும் தலைப்பில் ஆய்வாளர் ச.சத்தியதேவனும் நிகழ்த்தவுள்ளனர்.
உரைகளைத் தொடர்ந்து, திறந்த கலந்துரையாடலும் நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .