Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 நவம்பர் 10 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (10) காலை, சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில், நகர சபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .