Freelancer / 2023 நவம்பர் 14 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினது நல்வாழ்வு நம்பிக்கை செயற்றிட்டத்தின் கீழ் உண்மை விதை வெங்காய உற்பத்தி தொடர்பான செயல்முறை பயிற்சி நடைபெற்றுள்ளது.

இந்த செயல்முறை பயிற்சி, நெடுந்தீவு பகுதிக்கான விவசாய போதனாசிரியர் சி.கோகுலராமினால், நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் விவசாய செயற்திட்டக் காணியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான விதை வெங்காயத்தினை மானியமாக விவசாயத் திணைக்களம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், நெடுந்தீவு ஊரும் உறவின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மு.அமிர்தமந்திரன், தலைவர் கலின்குமார் மற்றும் விவசாய இணைப்பாளர் தமிழ்மாறன், விவசாய அமைப்புக்களின் தலைவர் மகாராசா, பணியாளர்கள், மூத்த விவசாயிகள் ஆகியோர் எனப் பலர் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago