2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பட்டதாரிகள் பேரணி நடத்தினர்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக, பேரணியொன்றை இன்று (05) நடத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய இந்தப் பேரணி, பலாலி வீதியூடாக வேம்படிச் சந்தியையடைந்து, அங்கிருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை சென்று, மாவட்ட செயலாளரிடம் மகஐரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

தமக்கான வேலைவாய்ப்புகளை வழங்குமாறு கோரி, வட மாகாண பட்டதாரிகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .