Freelancer / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் பட்டம் ஒன்றை பறக்க விட்டபோது, குறித்த பட்டத்துடன் சுமார் 120 அடி வரை இழுத்துச் செல்லப்பட்ட இளைஞனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பட்டத்துடன் உயர இழுத்துச் செல்லப்பட்ட மனோகரன் என்ற இளைஞர் முப்பது அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.
இதன்போது அவரது உடலில் அடிப்பட்டதாகவும், இதன் காரணமாக முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் மூன்று நாட்களின் பின்னர் சிகிச்சைப் பெற்று தனது விருப்பத்தின் பேரில் வீடு திரும்பியுள்ளார். எனினும், தற்போதும் முள்ளந்தண்டில் வலி ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago