எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் தடுத்து வைத்திருந்தார் என்று அவரது தாயாரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தினர். அத்துடன் இளைஞனைக் கைது செய்தனர்.
13 வயது நிரம்பிய சிறுமியை சட்டபூர்வ பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞனை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
“சந்தேகநபரை சிறுமி காதலித்தார். அதனால் சந்தேகநபரின் வீட்டுக்குச் சிறுமி சென்றுள்ளார். பின்னர் தான் தனது வீட்டுக்குத் திரும்பமாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். அதனால் சிறுமியின் தாயார் வந்து அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னரே இளைஞனுக்கு எதிராக சிறுமியின் தாயார் முறைப்பாடு வழங்கியுள்ளார். எனினும் சிறுமியை இளைஞன் வன்புணர்வுக்குட்படுத்தவில்லை. அவரை பிணையில் விடுவிக்கவேண்டும்" என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், "சிறுமியை இளைஞன் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்றே பொலிஸார் குற்றச்சாட்டுப் பதிவிட்டுள்ளனர். எனவே அவரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது" என்று கட்டளையிட்டார்
அத்துடன், சந்தேகநபரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
6 minute ago
21 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
33 minute ago
1 hours ago