Niroshini / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு, கோவிலை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடைகளில் சில கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணண், இதனை அனைவரும் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து, கோவிலை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் யாழ். மாநகர சபை மேயர் மணிவண்ணன் யாழ்ப்பாணப் பொலிஸாருடன் இன்றைய தினம் நேரடியாக களத்துக்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
விசேட திருவிழாக்கள் மற்றும் பூஜை நேரங்களை தவிர, மீதி நேரங்களில் வீதி கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவும் பொதுமக்களை கோவில் சூழலில் உள்ள கடைகளுக்கு செல்லும் வகையில் அனுமதிக்கவும் இணக்கம் காணப்பட்டது.
இதனையடுத்து, பயணத் தடைகளில் மேயர் சில தேர்வுகளை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, கோவில் பூஜை நேரங்கள் மற்றும் விசேட திருவிழா நாள்கள் உள்ளிட்ட சில நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளார்.
14 minute ago
41 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
41 minute ago
20 Dec 2025
20 Dec 2025