Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை கிராம கோட்டு சந்தியிலுள்ள மதுபான விற்பனை நிலையம் மற்றும் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையம் என்பன இன்று பொதுச் சுகாதார பரிசோதகரால் 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளன.
கடந்த வாரம் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றியோருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், மதுபானம் விற்பனை நிலையத்தின் மேலுமொரு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கிராமக்கோட்டுப் பகுதி மதுபான விற்பனை நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், அங்கு பணியாற்றியவர்களது உறவினர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மதுபான விற்பனை நிலையமும் 14 நாள்கள் மூடப்பட்டதுடன், தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago