2026 ஜனவரி 17, சனிக்கிழமை

பஸ் தரிப்பு நிலையத்திற்குள் புகுந்த கெப்

Janu   / 2026 ஜனவரி 13 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் ரக வாகனமொன்று, பஸ் தரிப்பு நிலையத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் திங்கட்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோவில் பகுதியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இருப்பினும் குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் வாகனத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

 நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X