Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 09 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
கோண்டாவில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து, சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு நபர் தலைமறைவாகி உள்ளார்.
கொள்ளையடித்த இலத்திரனியல் பொருட்களை நேற்று விற்பனை செய்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவிலில் கடந்த மாதம் வர்த்தக நிலையத்துக்கு எடுத்து வருவதற்காக பாரவூர்தியில் பொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில், டீசல் இல்லாமை காரணமாக தரித்துவிடப்பட்டிருந்தது.
அதன்போதே, இரவு வேளை பாரவூர்தி உடைக்கப்பட்டு சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் வர்த்தகரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், கோண்டாவிலைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 4 வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago