Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 06 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை, சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
நாகஞ்சசோலைப் பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (05) அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர், புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரையும் கைதுசெய்துள்ளதுடன், தோண்டுவதற்கு பயன்படுத்திய ஸ்கனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.
முள்ளியவளை, கணுக்கேணி, பூதன்வயல், நொச்சியாகம, ராஜாங்கனை, சாலிய அசோகபுர, அம்பலாந்தோட்டை மற்றும் தபுத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவப் பிரிவில் பணியாற்றும் வீரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்றுப் பொருட்களையும் சிறப்பு அதிரடிப் படையினர் முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
முள்ளியவளை பொலிஸார், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். (N)
46 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
2 hours ago