Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 23 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாபொல புலமைப்பரிசில் கிடைக்கப்பெறாத பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உதவித்தொகையை 1,500 ரூபாவினால் அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அதுலத்முதலி அவர்களால் 1981ஆம் ஆண்டு மகாபொல புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, அத்திட்டத்தின் அடிப்படையில் சுமார் 12,000 பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இம்மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டமொன்றும் திறைசேரியின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 7,000 மாணவர்களுக்கு தலா 2,500 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அத்தொகையை 1,500 ரூபாவால் அதிகரித்து 4,000 ரூபாவாக வழங்க அமைச்சரவை மூலம் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago
3 hours ago