2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மேலும் சில காணிகள் விடுவிப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வலிவடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07)  மேலும் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக, பலாலி இராணுவ ஊடகப்பிரிவின் இணைப்பாளர் மேஜர் ஹேவகே தெரிவித்தார்.

மக்களின் மீள்குடியேற்றத்துக்காக காலை 9 மணிக்கு, ஊறணி பகுதி விடுவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை மூலம் இந்தப்பகுதி, கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்தது. 

மக்களின் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் உண்ணாவிரதங்களை அடுத்து, வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .