Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தீபத்திருநாளானது, அதனைக் கொண்டாடும் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கும் லௌகீக வாழ்க்கைக்கும் ஒளியின் பங்கு மிக முக்கியமாக அமைகின்றது. அந்தவகையில், தீபாவளி தினத்தன்று இந்து பக்தர்களால் ஏற்றப்படும் தீப ஒளியானது, அவர்களது உள்ளங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துவதைப் போன்றே நம் நாட்டின் அனைத்து மக்களின் இதயங்களிலும் ஒளியேற்றி சகல இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒளிப்பாலமாக அது அமைய வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும்.
“மேலும், ஒற்றுமை என்பது நமது நாட்டுகு மாத்திரமன்றி முழு உலகத்தினதும் இருப்புக்கு கட்டாயத் தேவையாக அமைந்துள்ள இன்றைய பொழுதில், இலங்கையர் என்ற வகையில் நாமும் இன, மத என பிரிவடைந்து காணப்படுவதற்கு பதிலாக சகவாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆழமான பிணைப்பு மிக்க புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட, இவ்வாறான கலாசார விழாக்கள் பெரும் ஆதாரமாக அமையுமென்பதே எனது எண்ணமாகும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
38 minute ago