Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாருக்கும் மதுபானசாலை அனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நான் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன். அத்துடன் நான் எனக்கோ என்னுடைய குடும்பத்துக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, அல்லது எனக்கு தெரிந்த யாருக்கோ, மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தைக் கோரவோ அல்லது மத்தியஸ்தம் பண்ணவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி வெளிப்படையாக ஒரு வாக்குமூலத்தை வழங்குகிறேன்” குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “யாழ்.மாவட்டத்தின் என் சக வேட்பாளர்கள் குறிப்பாக பழைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு வாக்குமூலம் வழங்க முடியுமா என நான் சவால் விடுக்கிறேன்.
“அண்மைய மாதங்களில் வடக்கில் பல மதுபானக்கடைகள் தோன்றியதன் காரணமாக நாளாந்தக் கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.“ எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. (AN)
12 minute ago
23 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
34 minute ago