Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
காரைநகர் மேற்கு கிராம அலுவலர் பிரிவில், மருத்துவ அதிகாரி ஒருவரால், எவ்வித அனுமதியுமின்றி புதிதாக குளக்கட்டொன்று அமைக்கப்பட்டுள்ளதால், குடிமனைகளிலிருந்து வரும் மேலதிக மழை நீரை வயல் நிலங்களுக்கு உட்புகாதவாறு நீண்டகாலமாக பாதுகாத்து வந்த பெரும்பத்தை வாய்க்காலும் வேரப்பிட்டி கல்வந்தாழ்வு வாய்க்காலும் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால், பெரும்பத்தை தடுப்பனைக்கு மேலதிக மழைநீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர், பெரும்போக உத்தியோகத்தர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் ஆகியோர் வயல்கள் நிலங்களை வந்து பார்வையிட்டு, அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள குளக்கட்டை வெட்டி, தடுப்புப் பலகை ஊடாக வெளியேற்ற ஆலோசனை நடத்தப்பட்டது.
எனினும், அங்கு வருகை தந்த சிலர், புதிதாக அமைக்கப்பட்ட குளக்கட்டை வெட்டிவிட முடியாதெனப் பதிலளித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025