2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மல்லாவி துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

Editorial   / 2023 ஜூலை 10 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மல்லாவி பாலி நகர் வன்னிகுளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞனை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனிக்குளம், பாலி நகரைச் சேர்ந்த எம்.திலக்ஷன் என்ற 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞன் கூலித்தொழிலாளி.

துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், உறவினர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரை சுட்டதற்கான காரணம் குறித்தும், அவரை சுட வந்தவர்கள் குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த மல்லாவி பொலிஸார் அவர்களைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X