2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மாதகலில் படகு விபத்து: ஒருவர் மாயம்

Editorial   / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

இன்று (04) அதிகாலை மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இரண்டு இளைஞர்கள் இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார்.

அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X