Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 26 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் நாளை (27) சனிக்கிழமை மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(26) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான் நிராகரித்துள்ளார்.
தமக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நாளைய தினம் சனிக்கிழமை (27) ஆம் திகதி மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதனால், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உப- தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராக மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26) விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் போதிய சாட்சிகள் மன்றில் சமர்ப்பிக்கப்படாமையினால் , மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நிராகரித்தார்.
8 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Aug 2025