2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முகாமையாளர் தாக்கி சீவல் தொழிலாளி உயிரிழப்பு

Mayu   / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனை, தென்னை வள சங்க முகாமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கரவெட்டி வடக்கை சேர்ந்த வேலன் பிரேமதாஸா (வயது 54) என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பனை தென்னை வள சங்கத்திற்கு தொழிலாளி சென்ற வேளை , முகாமையாளருடன் தர்க்கம் ஏற்பட்டதையடுத்து , தொழிலாளி மீது முகாமையாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். 

அதனையடுத்து வீடு திரும்பிய தொழிலாளி , சுகவீனமுற்ற நிலையில் 31ஆம் திகதி புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (03) உயிரிழந்துள்ளார். 

உயிரிழப்பை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , கால் மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டுள்ளமையும் , அந்த முறிவுகளினால் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக நிமோனியா ஏற்பட்டு , உயிரிழப்பு சம்பவித்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது. 

மேலும்,  நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , முகாமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.. 

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X