2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மொழி பயிற்சி நிறைவு

Freelancer   / 2023 மார்ச் 01 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

அரச நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தால் இரண்டாம் மொழி பயிற்சிநெறி வகுப்புக்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. 

இதன் செயற்பாடாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு 150 மணித்தியாலங்களை உள்ளடக்கிய இரண்டாம் மொழி பயிற்சிநெறி வகுப்புக்கள் கடந்த வருடம் ஜப்பசி மாதம் ஆரம்பிக்கப்பட்டு, இவ் வருடம் மாசி மாதம் முடிவடைந்தது.  

இக்கற்கை நெறியானது, முல்லைத்தீவு மாவட்டச் செயலக அரச கரும மொழிகள் பிரிவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. 

கற்கை நெறியின் நிறைவு நிகழ்வு, ஒட்டுசுட்டான் செயலாளர் திருமதி ப.ஜெயராணி தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (28) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க  அதிபர்  க.விமலநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X