2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

யாழில் 150 கிலோகிராம் கஞ்சா கைப்பற்று

Freelancer   / 2023 மார்ச் 29 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், மாதகல்ப் பகுதியில் கடத்தி வந்த 150 கிலோகிராம் கஞ்சா, நேற்றிரவு (28) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருந்தி கடத்தி வந்து, மாதகலில் இறக்கி வைத்திருத்த வேளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. 

மாதகல் கடறகரையில் இருந்த பற்றைக்குள் மறைக்கப்பட்ட நிலையில் இருந்து மீடகப்பட்ட இக்கஞ்சாவைத் தொடர்ந்து, அருகில் மறைத்து வைத்திருந்த படகு ஒன்றைனையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட கஞ்சா சட்ட நடவடிக்கைக்காக காங்கேசனதுறை கடற்படை முகாமுக்கு தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .