Editorial / 2021 டிசெம்பர் 17 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஒருவருக்கே மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் டி.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.
தொற்றுக்குள்ளானவர் தென்னாபிரிக்காவிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாட்டிற்கு வருகை தந்தவரென தெரியவந்துள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கடந்த புதன்கிழமை இவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிக நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பதிவாகிய மலேரியா தொற்றாளர் இவராவார். மலேரியா தொற்றுக்குள்ளான இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .