Niroshini / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில், இன்று (24) மேலும் 9 பேர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும், கொடிகாமத்தில் இருவரும, வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் ஆவார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரும், கொடிகாமத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும், வவுனியாவைச் சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும், கொக்குவிலையைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், நவாலியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதவேளை, கொடிகாமத்தைச் சேர்ந்த 80 மற்றும் 70 வயதுடைய ஆண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 24 வயது இளைஞனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago