Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதாகத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன், இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாவட்டத்தில், கொரோனா அபாயம் மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தம் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது சிறந்தது என்றார்.
தற்போது, தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 130 வரை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், இது மோசமான அதிகரிப்பாகும் எனவும் கூறினார்.
"அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 36 ஆயிரம் பேர் வரை மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், கணிசமானவர்கள் தடுப்பூசியைப் பெறாமல் உள்ள நிலையில், இராணுவத்தின் பங்களிப்புடன் இயலாத வீடுகளில் இருப்பவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி ஏற்றம் இடம்பெற்று வருகிறது" என, அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025