Niroshini / 2021 நவம்பர் 16 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், அவர் கூறினார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக கூறியுள்ள நிலையில், மக்கள் அதிகளவில் பெற்றோலை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர்கள் அதனை முண்டியடித்துக்கொண்டு பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளதெனவும் கூறினார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடமாகாண முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, நேற்றைய தினம் திங்கட்கிழமை, காங்கேசன்துறை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியத்தில், 26 இலட்சம் லீற்றர் டீசல் , 1 இலட்சத்து 52 ஆயிரம் லீற்றர் 92 தர பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும் 165,000 லீற்றர் மண்ணெணையும் இருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இன்றைய தினம் 66 ஆயிரம் லீற்றர் ஓக்டைன் பெற்றோல், யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விநியோகம் செய்வதற்கு எடுத்து வரப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், டீசல் எந்தவகை தட்டுப்பாடுமின்றி விநியோகிக்கக்கூடிய வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
"இதேவேளை, பெற்றோல் விநியோகம் தடைப்படாமல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி , முண்டியடித்து எதுவும் இல்லாமல் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ள முடியும்" எனவும், அவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago