2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையில் திரவ ஒட்சிசன் கொள்கலன்

Editorial   / 2022 ஜனவரி 18 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ், வி.நிதர்ஷன்

யாழ். போதனா வைத்தியசாலை ஒட்சிசன் பயன்பாட்டுக்கென 10,000 லீற்றர் கொள்ளளவு உடைய திரவ ஒட்சிசன் கொள்கலன், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜாவினால்  வைபவ ரீதியாக இன்று (18) காலை திறந்துவைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் 24 இலட்சம் ரூபாய் நிதியில், வடக்கு மாகாணத்தில் முதன்முதலாக இந்த திரவ ஒட்சிசன் கொள்கலன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 குறித்த திரவ ஒட்சிசன் கொள்கலன் மூலம் வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளுக்கு குழாய் வழியாக ஒட்சிசனை எடுத்துச் செல்லக் கூடியதாக உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராஜா தெரிவித்தார்.

கடந்த காலங்களில்  யாழ்.  போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு இடர்களை எதிர்நோக்கியதாகவும் எனினும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள பலத்தின் மூலம் ஒட்சிசன் தட்டுப்பாடு இல்லாது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .