Freelancer / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், வி.நிதர்ஷன்
யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்ககான வரவு - செலவுத்திட்டம், இன்றைய தினம் (28) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து, 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் வரவு - செலவு திட்டம், மேயர் ஆர்னோல்ட் தலைமையில் இன்று முன்மொழியப்பட்டது.
சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன், ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார்.
அதனால் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தது.
மேயர் ஆர்னோல்டினால், 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்ட போது, அதுவும் தோற்கடிக்கப்பட்டது. (N)
13 minute ago
18 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
29 minute ago
36 minute ago