Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு, சபை மாநாட்டு மண்டபத்தில், மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில், இன்று (28) நடைபெற்றது.
இதன்போது, சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தபோதும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வரவு – செலவுத் திட்டததுக்கு ஆதரவாக, 16 பேரும் எதிராக, 21 பேரும் வாக்களித்தனர்.
அதேநேரத்தில், 7 உறுப்பினர்கள் அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை.
இதையடுத்து, 5 மேலதிக வாக்குகளால், மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் தோறகடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
58 minute ago