2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்குமாறு கடிதம்

George   / 2017 மார்ச் 07 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யும்படி அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு, நேற்று நடைபெற்றபோது, அவர் இதன்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் பட்டதாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இதற்கமைய, அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு இந்த அமர்வு நிறைவடைந்தவுடன் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. பட்டதாரிகளை அங்குள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யும்படி கேட்டு கொள்ளுகிறேன்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .