Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 23 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மக்களுக்கான உதவிகளை பெற்றுதரும் பொருட்டு மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்களால் வெள்ள நிவாரண பணியொன்று ஒழுங்கு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த மூன்று தினங்களாக கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிவாரணப்பொருட்கள சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன.
சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று திங்கட்கிழமை (23) முல்லைத்தீவுக்கு எடுத்துவரப்பட்ட அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்த செயற்திட்டத்தின் மூலம் முத்தையன்கட்டு குளம், திருமுறிகண்டி, இந்துபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு போதுமான உலர் உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் உடைகள் என்பன கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago