Niroshini / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்களும் சுத்திகரிப்பு தொழிலாளிகளும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம், நேற்று (25) மாதிரிகள் பெறப்பட்டு, பிசிஆர் பரிசோதனைக்கு உபடுத்தப்பட்டன.
அவர்களில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதனால் அங்கு பணியாற்றும் 40 உத்தியோகத்தர்களை சுயதனிமைப்படுத்தி, வங்கியை தற்காலிக மூடுமாறு,மாநகர சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அங்கு நிரந்தரக் கடமையாற்றுபவர்கள் தவிர்ந்த வேறு கிளைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கடமைக்கு அமர்த்தி, உரிய சுகாதார நடைமுறைகளின் கீழ் கிளையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கலாம் என, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago