Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
வடமாகாணத்தில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி முதல், வடமாகாணத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் இதுவரை மொத்தமாக 32,844 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், இவர்களில் 14,480 தொற்றாளர்கள் ஓகஸ்ட் மாதத்திலும் 5,847 தொற்றாளர்கள் செப்டெம்பர் மாதத்தின் முதல் 12 நாள்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
இதேபோல வடமாகாணத்தில், கொரோனா தொற்று காரணமாக இதுவரை மொத்தமாக 578 இறப்புகள் பதிவு செய்யப்பட்டடுள்ளன எனத் தெரிவித்துள்ள அவர், இவற்றில் 228 இறப்புகள் ஓகஸ்ட் மாதத்திலும் 169 இறப்புக்கள் செப்டெம்பர் மாதத்தின் முதல் 12 நாள்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இறப்புகளை ஆராயும்போது பெரும்பாலான இறப்புக்கள் தடுப்பூசி எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
35 minute ago
6 hours ago