2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடக்கில் நீரில் மூழ்கி மூவர் பலி

Freelancer   / 2022 மே 09 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் பூம்புகார் கடல் மற்றும் மண்கும்பான் சாட்டி கடலில் மூழ்கி  இருவர் உயிரிழந்துள்ளனர். 

அரியாலை பூம்புகார் கடலில் நீராடிய ஞானகாந்தன் ஜெயமதன் (வயது 36) என்பவரும், மண்கும்பான் சாட்டி கடலில் நீராடிய அரியாலையை சேர்ந்த இராசரத்தினம் கணேசராசா (வயது 46) என்பவருமே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு இருந்த கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மயூரன் (வயது 22) என்பவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .