Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந், எஸ். நிதர்ஷன்
வடக்கில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (18) முற்பகல் 10 மணியளவில், மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கண்டனப் போராட்டத்தில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டவிரோத மணல் அகழ்வால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், மணல் வழித்தட அனுமதி இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களில், சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்து உள்ளனவெனத் தெரிவித்தனர்.
அதேபோன்று, வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறினர்.
எனவே, வடக்கின் மண் வளம் அழிக்கப்படுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
37 minute ago