Niroshini / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி, வடக்கு - கிழக்கில் உள்ள கமநல சேவை நிலையங்கள் முன்பாக, இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அதில் ஓர் அங்கமாக, வலிகாமம் கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், புத்தூர் மற்றும் உரும்பிராய் கம நல சேவை நிலையங்கள் முன்பாக, இன்று முற்பகல் 9.15 மணியளவில், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றுள்ளார்.
வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடை செய், விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய், உருளைக்கிழங்கு அறுவடை காலத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
8 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
55 minute ago
1 hours ago