Niroshini / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர், நேற்று (30) மாலை 5 மணியளவில், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து, 5 வாள்கள், 2 மோட்டார்சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன என, பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய வீடொன்றில், வன்முறைக் கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து, கறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 13 பேரும், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
10 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
57 minute ago
1 hours ago