Freelancer / 2023 மார்ச் 24 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
உலக காசநோய் தினமான இன்று (மார்ச் 24) வவுனியாவில் விழிப்புணர்வு பேரணியொன்று நடைபெற்றது.
காசநோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், வவுனியா மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில், குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இம்முறை “ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்” எனும் தொனிப்பொருளில் இப்பேரணி நடைபெற்றது.
முன்னதாக வவுனியா வைத்தியசாலையின் மார்புநோய் சிகிச்சை பிரிவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு கருதரங்கு நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து ஆரம்பித்த பேரணி, வவுனியா புதிய பஸ்நிலையத்தை அடைந்து, மீண்டும் வைத்தியசாலையை அடைந்தது.
இப்பேரணியில் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். (N)
6 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
15 minute ago