Editorial / 2019 ஜூன் 15 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தனிமையில் வசித்த மூதாட்டியை வாள்முனையில் அச்சுறுத்திய கொள்ளையர்கள், அங்கிருந்து நகைகள், பணம், அலைபேசிகளை திருடி சென்ற சம்பவமொன்று, யாழ்ப்பாணம் - புங்கன்குளம் பகுதியில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஓய்வுபெற்ற அரச ஊழியரான குறித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல், வாளை காட்டி மூதாட்டியை அச்சுறுத்தியதுடன், மூதாட்டியின் வாய்க்குள் துணியை அடைந்து பணம், நகை, அலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, இதையறிந்த அயலவர்கள், வாய்க்குள் துணி அடைப்பட்ட நிலையில் மூச்சுவிட சிரமப்பட்ட மூதாட்டியை, மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தொியப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago