Janu / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹயஸ் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹயஸ் வாகனத்தில் கடந்த திங்கட்கிழமை (04) வந்த இனந்தெரியாத குழு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன்போது காயமடைந்த இளைஞன், தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
ஹயஸ் வாகனத்தில் வந்த வாள்வெட்டுகுழுவினரை பிடிப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிசூடும் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் வாள்களை விட்டுவிட்டு, ஹயஸ் வாகனத்தில் தப்பிசென்ற வாள்வெட்டுக்குழுவினை சேர்ந்த ஒருவர், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து புதன்கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர்.
வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமிருவர் தலைமறைவாகி இருப்பதாக தெரியவந்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேறகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செ.கீதாஞ்சன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .