Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (10) இரவு, வீடு நோக்கி நடந்து சென்ற அவரை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த பெண், உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அன்றிரவே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பயனின்றி அவர் அங்கு உயிரிழந்தார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் கொடிகாமம், மீசாலை வடக்கைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயாரான பூபாலசிங்கம் தனலட்சுமி (வயது-65) என்ற பெண்ணே உயிரிழந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
47 minute ago
57 minute ago