2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 மே 28 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி ஏ-9 வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நுணாவில் பொதுநூலகத்துக்கு முன்பாக நேற்று (27) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் மீசாலை மேற்கைச் சேர்ந்த மகேஸ்வரன் சுரேந்திரகுமார் (வயது 45) என்பவரே உயிரிழந்தார்.

கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கனரக வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதோடு விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X