Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2023 டிசெம்பர் 27 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் , விபத்தொன்றை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் திங்கட்கிழமை (25) இரவு விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி , விபத்து இடம்பெற்ற இடத்திலேயே முச்சக்கர வண்டியை விட்டு தப்பி சென்றுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை (26) தனது வீட்டுக்கு அருகில் தன் உயிரை மாய்த்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கட்டுவான் மேற்கை பகுதியை சேர்ந்த , மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரம் மயூரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago