Freelancer / 2022 ஜூன் 21 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
மண்ணெண்ணெய் இன்மையால் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் சிறுபோக வெங்காயச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் விவாசாயிகள் பலரும் திண்டாடுகின்றனர்.
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் செம்பியன்பற்று, அம்பன், குடத்தனை ஆகிய கிராமங்களில் நெல் அறுவடைக்குப் பின்னர் பெருந்தொகையான நிலப்பரப்பில் புலோலி, கரவெட்டி, அல்வாய் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிறுபோக நெற் செய்கையை மேற்கொள்வது வழக்கம்.
இச் சிறுபோக வெங்காய செய்கையில் அதிக விளைச்சல் கிடைத்து விவசாயிகள் பெரிதும் நன்மை அடைந்து வந்துள்ளார்கள்.
இப் பிரதேசத்தில் சிறுபோக வெங்காய செய்கைக்காக விவசாயிகள் விளைநிலங்களைப் பண்படுத்தி வெங்காய நடுகையில் ஈடுபடுவதற்காக தயாராக இருந்து வருகின்ற போதிலும், நடுகை செய்ப்படும் வெங்காயப் பயிருக்கு தண்ணீர் இறைக்க போதிய மண்ணெண்ணெய்யை எதிர் பார்த்து காத்திருந்து வருகின்றனர்.
எனினும் இரண்டு மாதங்களுக்கு மேலாக இப் பிரதேசத்தில் மண்ணெண்ணெய் வராமையினால் வெங்காயத்தை பயிரிடாமல் காத்திருக்கின்றனர். (R)
32 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago