2025 மே 05, திங்கட்கிழமை

முல்லைத்தீவு முஸ்லிம்களுக்காக போராட்டம்

Niroshini   / 2017 மார்ச் 31 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

மன்னார் மாவட்டத்தின் முசலி மக்கள் வாழ்ந்த பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய வர்த்தமானியில் கையொப்பம் இட்டதை அடுத்து, குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்துவரும் முல்லைத்தீவு முஸ்லிம்கள், இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் அல்காசிமி சிட்டி முல்லை ஸ்கீமில் வாழும் முல்லைத்தீவு முஸ்லிம்கள் இன்று  ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் முல்லை ஸ்கீம் நுராணிய்யா ஜூம்ஆப் பள்ளிக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி கடந்த மூன்று நாட்களாக மன்னார் மரிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இன்று குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முல்லைத்தீவு முஸ்லிம்கள் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்ட குறித்த பிரதேசங்களை இரத்துச் செய்யுமாறும், மன்னார் முசலி மக்களை அவர்களுடைய பூர்வீக இடங்களில் நிம்மதியாக வாழ விடுமாறும் கோரி முல்லைத்தீவு முஸ்லிம் மக்கள் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கும் மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X