2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய எண்மர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், நிந்தனி பிரதேசத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 08 பேரை இன்று புதன்கிழமை அதிகாலை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் ஒருவரின் வீட்டில் பாரிய குழி தோண்டப்படுவதையும் பூஜைகள் நடைபெறுவதையும் கண்ட இப்பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபர்கள் குறித்த வீட்டில் குழி தோண்டிக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .