2025 மே 21, புதன்கிழமை

கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் மீட்பு

Kanagaraj   / 2013 மே 09 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் அனுராதபுரம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பாவித்து ஓதுக்கப்பட்ட பீரங்கி ரவைகளின் பின்புறப்பகுதி ஐந்து உட்பட எரிகணை ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் பாவிக்கப்படாத ரவை ஒன்றினையும் கருவலகஸ்வௌ பொலிசார் இன்று வியாழக்கிழமை  மாலை மீட்டுள்ளனர்.

கருவலகஸ்வௌ பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அநுராதபுர வீதியிலுள்ள தப்போவ குளத்தினருகிலேயே இந்த ரவைகள்  மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ரவைகளுள் எரிகணைக்கு பயன்படுத்தப்படும் ரவையினை புத்தளம் விஜயபா இராணுவ முகாமைச் சேர்ந்த குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. பின்னர் மீட்கப்பட்ட ரவைகளின் பகுதிகள் புத்தளம் இராணுவ முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X